செய்திகள்
பிரதமர் மோடி

ஆகஸ்ட் 14 பிரிவினை கொடுமைகளை நினைவுகூறும் நாளாக அனுசரிப்பு - மத்திய அரசாணை வெளியீடு

Published On 2021-08-14 12:42 GMT   |   Update On 2021-08-14 12:42 GMT
சமூக வேறுபாடுகள் மற்றும் ஒற்றுமையின்மை என்ற விஷத்தை அகற்ற வேண்டியதன் அவசியத்தை ‘பிரிவினை கொடுமைகளை நினைவுகூறும் நாள்’ நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்
புதுடெல்லி: 

ஆகஸ்ட் 14 -ம் தேதி '‘பிரிவினை கொடுமைகளை நினைவுகூறும் தினமாக' அனுசரிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ட்விட்டரில் இது குறித்து பதிவிட்ட பிரதமர் மோடி 'பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க முடியாது' என்று கூறினார்.

தனது ட்விட்டர் பதிவில் "லட்சக்கணக்கான நமது சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் புலம் பெயரவும், அகதிகளாகவும், அனாதைகளாகவும் ஆக காரணமான பிரிவினை வன்முறையில், பலர்  உயிர்களையும் இழந்தனர். நம் நாட்டு மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட் 14 ஆம் தேதி பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாக அனுசரிக்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார். 

சமூக வேறுபாடுகள் மற்றும் ஒற்றுமையின்மை என்ற விஷத்தை அகற்ற வேண்டியதன் அவசியத்தை ‘பிரிவினை கொடுமைகளை நினைவுகூறும் நாள்’ நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்

இந்நிலையில் இதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டது.
Tags:    

Similar News