செய்திகள்
பாலியல் தொந்தரவு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2021-07-28 12:20 GMT   |   Update On 2021-07-28 13:45 GMT
கைது செய்யப்பட்ட வாலிபர் மீது ஆட்கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் சாலிமார் பாக் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, ஜவுளிக்கடைக்குச் செல்வதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது அவரை அடையாளம் தெரியாத நபர் ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

வீட்டுக்கு திரும்பியதும்  சிறுமி நடந்ததைப் பற்றி பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்ததில் பாலியல் தொல்லைக்கு உள்ளானது உறுதியானது.

இதைத் தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், உத்தரப் பிரதேச ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சலீம் அகமது (வயது 27) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது ஆட்கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விசாரணக்காக வசீர்ப்பூர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு வருவதாக துணை ஆணையர் உஷா ரங்னானி கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட சலீம் உ.பி.யில் துப்புரவாளராக வேலை செய்தவர். இவர் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பின்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமணையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது அங்கிருந்து தப்பித்து, டெல்லிக்கு வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Tags:    

Similar News