செய்திகள்
இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட ஹெலிகாப்டர்கள்

அமெரிக்காவிடம் இருந்து நவீன கடல்சார் ஹெலிகாப்டர்களை வாங்கியது இந்தியா

Published On 2021-07-17 14:58 GMT   |   Update On 2021-07-17 14:58 GMT
அமெரிக்காவின் சான் டியாகோ நார்த் ஐலேண்ட் கடற்படை தளத்தில் நடந்த விழாவில், ஹெலிகாப்டர்கள் அமெரிக்க கடற்படையிடம் இருந்து இந்தியக் கடற்படைக்கு முறைப்படி மாற்றப்பட்டது.
புதுடெல்லி:

இந்திய கடற்படைக்கு வலிமை சேர்க்கும் வகையில், அமெரிக்காவிடம் இருந்து 24 எம்.எச்-60 ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ராணுவ தளவாட விற்பனை திட்டத்தின் கீழ் இந்த 24 ஹெலிகாப்டர்களும் வாங்கப்படுகின்றன. அனைத்து காலநிலைகளிலும் பயன்படுத்தக்கூடிய, இந்த எம்எச்-60ஆர் ஹெலிகாப்டர்களை, அமெரிக்காவின் லாக்கீட் மார்டின் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது. 

இதில் முதல்கட்டமாக 2 ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதற்கான விழா அமெரிக்காவின் சான் டியாகோ நார்த் ஐலேண்ட் கடற்படை தளத்தில் நடந்தது. அப்போது ஹெலிகாப்டர்கள் அமெரிக்க கடற்படையிடம் இருந்து இந்தியக் கடற்படைக்கு முறைப்படி மாற்றப்பட்டது. ஹெலிகாப்டர்களை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து பெற்றுக் கொண்டார். 

இந்த ஹெலிகாப்டர்கள், இந்தியாவுக்கு தேவையான தனிச்சிறப்பான சாதனங்கள் மற்றும் ஆயுதங்களுடன் மாற்றியமைக்கப்படுகின்றன.

இந்த ஹெலிகாப்டர்கள், இந்திய கடற்படையின் முப்பரிமாண திறனை அதிகரிக்கும் என்றும், இந்த ஹெலிகாப்டர்களை இயக்குவதற்காக, இந்திய கடற்படையின் முதல் குழுவினர் அமெரிக்காவில் தற்போது பயிற்சி பெற்று வருவதாகவும் கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
Tags:    

Similar News