செய்திகள்
கேமரா கட்டுப்பாட்டு மையத்தை தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஜவகர்ரெட்டி பார்வையிட்டபோது எடுத்தபடம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலை உலகின் மிகச்சிறந்த பாதுகாப்பு ஆலயமாக மாற்ற ஏற்பாடு

Published On 2021-07-15 06:42 GMT   |   Update On 2021-07-15 06:42 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி திருமலை முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் தற்போது 1654 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
திருமலை :

திருப்பதி ஏழுமலையான் கோவில் நவீன தொழில் நுட்பத்துடன் உலகின் மிகச் சிறந்த பாதுகாப்பு ஆலயமாக மாற்றப்பட உள்ளது. அதற்காக, திருமலை முழுவதும் கூடுதலாகக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. அதற்கான கட்டுப்பாட்டு மையமும் தொடங்கப்பட உள்ளது.

தற்போதுள்ள கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு மையத்தை தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஜவகர்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், திருமலையில் வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளை அமைக்குமாறு தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை அதிகாரியிடம் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை அதிகாரி கோபிநாத் ஜாட்டி கூறியதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி திருமலை முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் தற்போது 1654 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் 1530 கேமராக்கள் பொதுக் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் நவீன தொழில் நுட்பத்துடன் உலகின் மிகச் சிறந்த பாதுகாப்பு ஆலயமாக மாற்றப்பட உள்ளது. அதற்கானப் பணிகள் நடந்து வருகிறது.

ஒரு குற்றம் நடந்த அடுத்த ஒருசில நிமிடத்தில் அருகில் நடமாடும் தேவஸ்தான பாதுகாப்புப்படை வீரருக்கு தகவல் போகும். தகவலின் போில் காவலர் விரைந்து சென்று குற்றங்களை கண்டறியலாம். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் திருமலை வனப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டத்தை அறிந்து கொள்ளலாம்.
Tags:    

Similar News