செய்திகள்
பிரதமர் மோடி

இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்

Published On 2021-07-08 03:03 GMT   |   Update On 2021-07-08 03:03 GMT
மத்திய மந்திரி சபை நேற்று அதிரடியாக மாற்றி அமைக்கப்பட்டது. புதிதாக 43 பேர் பதவி ஏற்றனர்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அதிகாரத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. ஆனால் இந்த 2 ஆண்டுகளில் ஒரு முறைகூட மத்திய மந்திரிசபையில் மாற்றமோ, விரிவாக்கமோ செய்யப்படவில்லை.

இந்த நிலையில், மத்திய மந்திரிசபையில் மாற்றங்கள் செய்ய வசதியாக 12 மந்திரிகள் நேற்று ராஜினாமா செய்தனர். 12 மந்திரிகளின் ராஜினாமாக்களை   பிரதமர் மோடியின் பரிந்துரை பேரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  ஏற்றுக்கொண்டார். 

அதைத் தொடர்ந்து மத்திய மந்திரிசபையில் புதிய மந்திரிகளின் பதவி ஏற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடந்தது.



இதில் புதிதாக 43 மந்திரிகள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டமும், இரவு 7 மணிக்கு அமைச்சர்கள் குழு கூட்டமும் நடைபெறுகிறது. 

Tags:    

Similar News