செய்திகள்
உத்தவ் தாக்கரே

மும்பையில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படும்: உத்தவ் தாக்கரே

Published On 2021-06-07 02:51 GMT   |   Update On 2021-06-07 02:51 GMT
தளர்வு அறிவிப்பில் சினிமா துறையினர் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். சினிமா, டி.வி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கொரோனா பாதுகாப்பு விதிகள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை படப்பிடிப்பின் போது பின்பற்ற வேண்டும்.
மும்பை :

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பதிப்பு குறைந்து வருவதை அடுத்து புதிய தளர்வுகளை மராட்டிய அரசு அறிவித்துள்ளது.

இந்த தளர்வுகள் இன்றுமுதல் நடைமுறைக்கு வர உள்ளன.

இதற்கிடையே முதல்-மந்திரி நேற்று சினிமா துறையினரிடமும் காணொலி காட்சி மூலம் பேசினார். அப்போது அவர் மும்பையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டால் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்படும் என்றார். மேலும் அவர் கூறியதாவது:-

கொரோனா 2-வது அலையால் மாநிலத்தில் டி.வி., சினிமா படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது நோய் பாதிப்பு குறைந்து வருகிறது. தளர்வுகள் அமலுக்கு வர தொடங்கிவிட்டன. கொரோனா வைரசுக்கு வீழ்ந்துவிடாமல் இருப்பதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். எனவே தளர்வு அறிவிப்பில் சினிமா துறையினர் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். சினிமா, டி.வி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கொரோனா பாதுகாப்பு விதிகள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை படப்பிடிப்பின் போது பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பில் சினிமா துறையை சேர்ந்த ஆதேஷ் பந்தேகர், நிதின் வைத்யா, பிரசாந்த் தாம்லே, பாரத் ஜாதவ், சித்தார்த் ராய் கபூர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News