செய்திகள்
மும்பையில் பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.1,200 அபராதம்

மும்பையில் பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.1,200 அபராதம்

Published On 2021-06-02 02:33 GMT   |   Update On 2021-06-02 02:33 GMT
பொது இடத்தில் எச்சில் துப்பினால் அபராதமாக கடந்த பல ஆண்டுகளாக ரூ.200 வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த 6 மாதத்தில் மும்பையில் பொது இடங்களில் எச்சில் துப்பியவர்களிடம் இருந்து ரூ.28 லட்சத்து 67 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
மும்பை :

மும்பை பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் எச்சில் துப்பினால் ரூ.200 அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த அபராத தொகையை ரூ.1,200 ஆக அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில், அபராதத்தை அதிகரிக்கும் திட்டத்துக்கு சமீபத்தில் கமிஷனர் இக்பால் சகால் ஒப்புதல் அளித்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இந்த திட்டத்துக்கு மாநகராட்சி பொதுக்குழு ஒப்புதல் வழங்க வேண்டும். அதற்கு முன் மாநில அரசும் ஒப்புதல் அளிக்க வேண்டும். பொது இடத்தில் எச்சில் துப்பினால் அபராதமாக கடந்த பல ஆண்டுகளாக ரூ.200 வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒரு மனு தொடர்பான விசாரணையின் போது, பொது இடங்களில் அத்துமீறுபவர்கள் மீது போலீசார் ரூ.1,200 அபராதம் விதிக்கும் போது, மாநகராட்சி மட்டும் எச்சில் துப்பினால் ஏன் ரூ.200-ஐ வசூலித்து வருகிறது என மும்பை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி இருந்தது. ஆனால் அபராதத்தை அதிகரிக்க மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிடவில்லை " என்றார்.

இந்தநிலையில் கடந்த 6 மாதத்தில் மும்பையில் பொது இடங்களில் எச்சில் துப்பியவர்களிடம் இருந்து ரூ.28 லட்சத்து 67 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக குர்லா, சாக்கிநாக்கா உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய எல் வார்டில் ரூ.4¾ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News