செய்திகள்
மந்திரி சுதாகர்

பெங்களூருவில் 12,354 மருத்துவ மாணவர்கள் நியமனம்: மந்திரி சுதாகர்

Published On 2021-06-01 02:52 GMT   |   Update On 2021-06-01 02:52 GMT
கொரோனா வைரஸ் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். அதனால் மருத்துவ நிபுணர்கள் கூறும் தகவல்களின் அடிப்படையில் அரசு முடிவுகளை எடுக்கும்.
பெங்களூரு :

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களுருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மக்கள் பிரதிநிதிகள், மக்களின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்க்கிறார்கள். மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் நோக்கத்தில் மக்கள் பிரதிநிதிகளில் சிலர் ஊரடங்கு குறித்து கருத்துகளை தெரிவிக்கிறார்கள். ஆனால் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அரசு அறிவியல் பூர்வமான தகவல்களின் அடிப்படையில் தான் முடிவு எடுக்கும்.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். அதனால் மருத்துவ நிபுணர்கள் கூறும் தகவல்களின் அடிப்படையில் அரசு முடிவுகளை எடுக்கும். முதல்-மந்திரி பதவி காலி இல்லை. காலியாக இல்லாத பதவி குறித்து யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை. பெங்களூரு மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 12 ஆயிரத்து 354 மருத்துவ மாணவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டு தனிமையில் உள்ள நோயாளிகளின் நலனுக்காக 5,737 மாணவர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் நோயாளிகளை போனில் அழைத்து பேசி அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.
Tags:    

Similar News