செய்திகள்
உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை: நாக்பூர் விஞ்ஞானிகள் சாதனை

Published On 2021-05-28 15:26 GMT   |   Update On 2021-05-28 15:46 GMT
உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை செய்யும் புதிய முறையை நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
நாக்பூர்:

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் மிக எளிமையானதும், புதுமையானதுமான கொரோனா பரிசோதனை முறையை அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) நாக்பூர் - தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் (NEERI) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுதொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறை எளிதாகவும், விரைவாகவும், சவுகரியமாகவும், சிக்கனமாகவும் உள்ளது.

இதில் 3 மணி நேரத்தில் முடிவை தெரிந்து கொள்ளலாம் என்பதால், கிராமங்கள் மற்றும் பழங்குடியின பகுதிளுக்கு இந்த பரிசோதனை பொருத்தமாக இருக்கும்.’
Tags:    

Similar News