செய்திகள்
குஜராத்தில் கருப்பு பூஞ்சை நோயுடன் 1100-க்கு மேற்பட்டோர் அனுமதி

குஜராத்தில் கருப்பு பூஞ்சை நோயுடன் 1100-க்கு மேற்பட்டோர் அனுமதி

Published On 2021-05-22 03:05 GMT   |   Update On 2021-05-22 03:05 GMT
குஜராத்தில் இந்த கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு, அதிகமானவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
ஆமதாபாத் :

மியூகோர்மைகாசிஸ் எனும் பூஞ்சை நோய், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களை தாக்கி வருகிறது. குறிப்பாக கொரோனா தாக்கி மீண்டவர்களை இந்த நோய் எளிதில் தாக்குவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் குஜராத்தில் இந்த கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு, அதிகமானவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

இதுவரை கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை விவரம் தெரியாவிட்டாலும், கொரோனாவில் இருந்து மீண்ட 1100-க்கு மேற்பட்டவர்கள் கருப்பு பூஞ்சை பாதிப்பினால் ஆமதாபாத், ராஜ்கோட், சூரத், வதோதரா நகர மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ராஜ்கோட் அரசு மருத்துவமனையில் அதிகபட்சம் 450 பேரும், ஆமதாபாத்தில் 350 பேரும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 80 சதவீதம் பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News