செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதியில் ஜூன் மாதத்தில் தரிசனம் செய்ய 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

Published On 2021-05-21 03:37 GMT   |   Update On 2021-05-21 03:37 GMT
கொரோனா தொற்று பரவல் காரணமாக திருப்பதியில் ஜூன் மாதம் தரிசனம் செய்ய 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
திருப்பதி:

கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டு விரைவு தரிசனத்திற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது ரூ.300 கட்டணத்தில் ஆன்லைனில் 10 ஆயிரம் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆனால் ஆன்லைன் தரிசனத்திற்கு முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக தரிசனம் செய்ய வரமுடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.

தற்போது தினமும் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்து வருகின்றனர். எனவே பக்தர்களின் தரிசன டிக்கெட்டுகளை குறைப்பது என தேவஸ்தானம் முடிவெடுத்தது.

அதன்படி திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வரும் ஜூன் மாதத்திற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் இணைய தளத்தில் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.

பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய வேண்டுமென தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

திருப்பதியில் நேற்று 3,227 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 988 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.23 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது. 
Tags:    

Similar News