செய்திகள்
சிவசேனா

மகாராஷ்டிரா 2-வது கொரோனா அலையை கட்டுப்படுத்தி உள்ளது: சிவசேனா

Published On 2021-05-19 01:46 GMT   |   Update On 2021-05-19 01:46 GMT
தற்போது பாதிப்பு வெகுவாக குறைந்து இருப்பதால் மகாராஷ்டிரா 2-வது கொரோனா அலையை கட்டுபடுத்தி உள்ளதாக ஆளும் கட்சியான சிவசேனா பெருமிதம் தெரிவித்து உள்ளது.
மும்பை :

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. தற்போது மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் மாநிலத்தில் பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது. அதன்படி அன்று 26 ஆயிரத்து 616 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு இருந்தது. 516 பேர் பலியாகி இருந்தனா்.

60 ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது பாதிப்பு வெகுவாக குறைந்து இருப்பதால் மகாராஷ்டிரா 2-வது கொரோனா அலையை கட்டுபடுத்தி உள்ளதாக ஆளும் கட்சியான சிவசேனா பெருமிதம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நெருக்கடிகள் மகாராஷ்டிராவிற்கு புதிதல்ல. மாநிலம் பல நெருக்கடிகளை கடந்து வந்து இருப்பது உலகத்திற்கும் புதிதல்ல. மராட்டியம் முதலாது மற்றும் 2-வது கொரோனா அலையை கட்டுப்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு நிசர்கா புயலை முறியடித்தோம். தற்போது டவ்தே புயலில் இருந்து வெளியே வரவும் வெற்றிகரமாக வழியை கண்டுபிடித்து உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News