செய்திகள்
கோப்புப்படம்

குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேச மாநில தினசரி கொரோனா அப்டேட்ஸ்

Published On 2021-05-18 14:46 GMT   |   Update On 2021-05-18 14:46 GMT
உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8737 பேர் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21,108 பேர் டிஸ்சார்ஸ் செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் இன்று புதிதாக 6447 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 67 பேர் உயிரிழந்துள்ளனர். 9557 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை அம்மாநிலத்தில் 7,66,201 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,60,489 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 9,269 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 96,443 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மத்திய பிரதேசத்தில் இன்று புதிதாக 5,412 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 70 பேர் உயிரிழந்துள்ளனர். 11358 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 7,42,718 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,52,612 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 7,139 பேர் உயிரழந்துள்ளனர். தற்போது வரை 82,967 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8737 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 255 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 21,108 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை 16,37,663 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,36,342 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News