செய்திகள்
மணக்கோலத்தில் உமாபதி- சுப்ரியா, லலிதா

கோலார் அருகே சகோதரிகளை திருமணம் செய்த வாலிபர் திடீர் கைது

Published On 2021-05-18 02:13 GMT   |   Update On 2021-05-18 02:13 GMT
கோலார் மாவட்டத்தை சேர்ந்த உமாபதி சுப்ரியா, லலிதா 2 பேரையும் திருமணம் செய்தது கர்நாடகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த திருமணம் குறித்து ஏராளமான கருத்துகள் வலம் வந்தன.
கோலார் :

கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுகு கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி(வயது 30). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அந்த சிறுமிக்கு சுப்ரியா(20) என்ற அக்காள் உள்ளார்.

ஆனால் வாய் பேச முடியாத மாற்று திறனாளியான சுப்ரியாவை திருமணம் செய்ய யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில் உமாபதியிடம் அந்த சிறுமி தன்னையும், அக்காளையும் திருமணம் செய்து கொள்ள கேட்டு உள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த உமாபதி நேற்று முன்தினம் ஒரே மேடையில் 2 பேரையும் திருமணம் செய்து உள்ளார். இந்த திருமணம் கர்நாடகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த திருமணம் குறித்து ஏராளமான கருத்துகள் வலம் வந்தன.

இந்த நிலையில் சகோதரிகளை உமாபதி திருமணம் செய்தது பற்றி அறிந்த முல்பாகல் தாலுகா குழந்தைகள் நலத்துறை அதிகாரி ரமேஷ் நேற்று வேகமடுகு கிராமத்திற்கு சென்றார்.

அங்கு சுப்ரியா மற்றும் அவரது தங்கையின் பிறப்பு சான்றிதழை வாங்கி பார்த்தார். அதில் சுப்ரியா தங்கைக்கு 17 வயது ஆவது தான் தெரிந்தது. இதனால் குழந்தை திருமணம் செய்ததாக உமாபதி மீது ரமேஷ் முல்பாகல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உமாபதியை கைது செய்தனர்.
Tags:    

Similar News