செய்திகள்
கோவாக்சின் தடுப்பூசி மருந்து

கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கும்... பார்முலாவை பகிர பாரத் பயோடெக் ஒப்புதல்

Published On 2021-05-15 11:34 GMT   |   Update On 2021-05-15 12:08 GMT
தடுப்பூசி பற்றாக்குறையை போக்க பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புதுடெல்லி:

கோவாக்சின் தடுப்பூசியின் பார்முலாவை பகிர தயாராக இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இதர நிறுவனங்களும் இனி கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியும்.

தடுப்பூசி ஒன்றே கொரோனாவைக் கட்டுப்படுத்த ஒரே வழி என மருத்துவ சமூகத்தால் ஒத்த கருத்து முன்வைக்கப்படுகிறது. ஆனால் நாட்டில் உள்ள பல நகரங்களில் பொதுமக்கள் தடுப்பூசி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் தொகையை கருத்தில் கொண்டு தடுப்பூசி பற்றாக்குறையை போக்க பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.



இந்நிலையில், மத்திய அரசின் வைரலாஜிக்கல் இன்ஸ்டிடியூட்டுடன் இணைந்து கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வரும் பாரத் பயோடெக், தடுப்பூசி உற்பத்தியை பலமடங்கு அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், பார்முலாவை பகிர ஒப்புதல் அளித்துள்ளது. 

தற்போது 3 பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து தடுப்பூசி தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஆகஸ்ட் மாதத்தில் கோவாக்சின் தடுப்பூசி உள்பத்தி 7 கோடியாக அதிரிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News