செய்திகள்
சிவ்ராஜ் சிங் சவுகான்

கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம், இலவசக் கல்வி: ம.பி. அரசு

Published On 2021-05-13 15:35 GMT   |   Update On 2021-05-13 15:35 GMT
கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம், இலவசக் கல்வி, ரேஷன் ஆகியவை வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன், படுக்கைகள் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றில் தட்டுப்பாடு நிலவுகிறது.

மத்தியப் பிரதேசத்திலும் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 8,970 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டனர். 84 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கொரோனாவால் பெற்றோர்களை/பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு சிறப்புத் திட்டங்களை மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘கொரோனா தொற்றில் பெற்றோர்களை, பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு சார்பில் இலவசக் கல்வி வழங்கப்படும். அத்துடன் மாதந்தோறும் ரூ.5 ஆயிரத்துடன் இலவச ரேஷனும் வழங்கப்படும். இத்தகைய குடும்பங்களில் இருந்து பணியாற்ற விரும்புவோருக்கு அரசு உத்தரவாதத்தின் கீழ் கடன்களும் வழங்க முடிவெடுத்துள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News