செய்திகள்
கோப்புப்படம்

இனி இவர்களும் கோவாக்சின் போடலாம் என கூறி வைரலாகும் தகவல்

Published On 2021-05-11 05:03 GMT   |   Update On 2021-05-11 05:03 GMT
இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் பட்டியல் பற்றி வைரலாகும் தகவல் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.


கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை இந்தியாவில் மிகத்தீவிரம் அடைந்துள்ளது. இதனையொட்டி கொரோனா தொற்று குறித்து பரவும் போலி செய்திகள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. அவ்வாறு வைரலாகும் தகவல்களில் ஒன்று, பாரத் பயோடெக் உற்பத்தி செய்யும் கோவாக்சின் தடுப்பூசியை 12 வயதுக்கும் மேல் இருக்கும் சிறுவர்களும் செலுத்திக் கொள்ளலாம் என கூறுகிறது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி சிறுவர்களுக்கும் செலுத்தி அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது என கூறும் தகவல் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இந்த தகவலை ட்விட்டரில் பல ஆயிரம் பேர் பகிர்ந்து இருப்பதை உணர்த்தும் ஸ்கிரீன்ஷாட் ஒன்றும் வைரல் பதிவில் இணைக்கப்பட்டு இருக்கிறது.



தடுப்பூசி குறித்த தகவல் வைரலானதை தொடர்ந்து, மத்திய அரசு அந்த தகவல் பொய் என கூறியுள்ளது. மேலும் அரசு சார்பில் வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவில், `பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை 12 வயதுக்கும் மேல் உள்ள சிறுவர்களுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை' என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 
  
அந்த வகையில் இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசியை சிறுவர்கள் செலுத்திக் கொள்ள மத்திய அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை என உறுதியாகிவிட்டது. இந்தியாவில் தற்போது வரை 18 மற்றும் அதற்கும் அதிக வயதுடையவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News