செய்திகள்
கோப்புபடம்

மேற்கு வங்கத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து

Published On 2021-04-30 15:21 GMT   |   Update On 2021-04-30 15:21 GMT
மேற்கு வங்காளத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்கம் மாநிலத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் நடப்பாண்டு தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவத்தொடங்கியதும் நாடு முழுவதும் மீண்டும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் தேர்வின்றி  தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில், மேற்கு வங்காளத்திலும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகள் இன்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. எனினும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் பயிலும்  பள்ளிகளிலேயே 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தபப்டும் எனவும் நண்பகல் 12 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3.15- மணி வரை தேர்வுகள் நடைபெறும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News