செய்திகள்
கோப்பு படம்.

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்: உ.பி. அரசு அதிரடி

Published On 2021-04-20 11:10 GMT   |   Update On 2021-04-20 11:10 GMT
அதிகரித்துவரும் கொரோனா தொற்றின் மத்தியில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படும் என உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு உத்தரப்பிரதேச அரசு அபராதம் விதித்து வருகிறது.

எனினும் மக்கள் தொடர்ச்சியாக அலட்சியமாக இருப்பதாகக் கூறி அபராதத் தொகையை உயர்த்தி அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி முகக்கவசம் அணியாதவர்களிடம் முதல்முறையாக ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தொடர்ச்சியாக கொரோனா விதிமுறைகளை மீறு பவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படும் எனவும் உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.
Tags:    

Similar News