செய்திகள்
ராகுல் காந்தி

மத்திய அரசின் வீணான பேச்சுவார்த்தைகளால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து -ராகுல் தாக்கு

Published On 2021-04-19 11:19 GMT   |   Update On 2021-04-19 11:19 GMT
நரேந்திர மோடி அரசு இந்தியாவின் நலன்களை சீனாவிடம் சரண்டர் செய்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
புதுடெல்லி:

லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்கும் வகையில், படைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படைகளை விலக்கிக் கொள்வது குறித்து சீனா-இந்தியா இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. 

கடைசியாக, 9ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின்போது, ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தெப்ஸாங் ஆகிய பகுதிகளில் இருந்து தங்கள் படைகளை, வாகனங்களை பின்வாங்கச் செய்ய சீன ராணுவ அதிகாரிகள் மறுத்து விட்டதாக  கூறப்படுகிறது.



இந்த தகவலை சுட்டிக் காட்டி, மத்திய அரசை காங்கிரஸ் விமர்சனம் செய்து வருகிறது. நரேந்திர மோடி அரசு இந்தியாவின் நலன்களை சீனாவிடம் சரண்டர் செய்துவிட்டதாகவும், தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி, தனது டுவிட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ளார். அதில், ‘கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் தெப்சாங் சமவெளிகளில் சீன ஆக்கிரமிப்பானது, டிபிஓ ராணுவ தளம் உள்ளிட்ட இந்தியாவின் நலன்களுக்கு நேரடி அச்சுறுத்தலாகும். மத்திய அரசின் வீணான பேச்சுவார்த்தைகளால் தேசிய பாதுகாப்பு பெருமளவில் ஆபத்திற்கு தள்ளப்பட்டுள்ளது’ என கூறி உள்ளார்.
Tags:    

Similar News