செய்திகள்
பாஜக தலைவர் திலீப் கோஷ்

மேற்கு வங்காள பாஜக தலைவர் 24 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையம் நடவடிக்கை

Published On 2021-04-15 18:29 GMT   |   Update On 2021-04-15 18:29 GMT
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய சில தினங்களுக்கு முன் இந்திய தேர்தல் ஆணையம் 24 மணி நேரம் தடை விதித்தது.
புதுடெல்லி:

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. பா.ஜனதாவுக்கும், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.

இருதரப்பினரும் பிரசாரத்தின்போது எல்லை மீறும் வகையில் பேசி வருகின்றனர். இந்து, முஸ்லிம் குறித்தே பிரசாரம் நகர்கிறது. இதனால் பல்வேறு புகார்கள் தேர்தல் கமிஷனுக்கு சென்ற வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இன்று இரவு 7 மணியில் இருந்து நாளை இரவு 7 மணி வரைக்கும் மேற்கு வங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
Tags:    

Similar News