செய்திகள்
கோப்புப்படம்

மேற்கு வங்காளத்துக்கு வரும் 4 மாநில விமானப் பயணிகளுக்கு கொரோனா இல்லை சான்றிதழ் கட்டாயம்

Published On 2021-04-15 02:39 GMT   |   Update On 2021-04-15 02:39 GMT
நாடெங்கும் கொரோனா தொற்று வேகம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மராட்டியம், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநிலங்களில் அதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
கொல்கத்தா:

நாடெங்கும் கொரோனா தொற்று வேகம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மராட்டியம், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநிலங்களில் அதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட 4 மாநிலங்களில் இருந்து மேற்கு வங்காளத்துக்கு வரும் விமானப் பயணிகள், பயணம் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் எடுத்த, ‘கொரோனா இல்லை’ என்ற ஆர்டி-பிசிஆர் சோதனை சான்றிதழை தம்முடன் வைத்திருக்க வேண்டும் என்று மேற்கு வங்காள அரசு நேற்று அறிவித்திருக்கிறது. விமானப் பயணிகள் யாரும், மேற்கு வங்காளத்துக்கு வந்தபின் சோதனை செய்துகொள்வதற்கான வழி இல்லை.

மேற்கண்ட 4 மாநிலங்களில் இருந்து புறப்பட்டு, மேற்கு வங்காளத்தின் பக்டோக்ரா, அண்டால் ஆகிய நகரங்களுக்கு வரும் விமானங்களின் பயணிகளுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்துடன், மேலும் 10 மாநிலங்களும் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன.
Tags:    

Similar News