செய்திகள்
கோப்புப்படம்

இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியது

Published On 2021-04-14 20:09 GMT   |   Update On 2021-04-14 20:09 GMT
தடுப்பூசி திட்டத்தின் 88-வது நாளான நேற்று முன்தினம் மட்டுமே 26.46 லட்சம் டோஸ்கள் போடப்பட்டு இருந்தன. இதில் 22,58,910 பேருக்கு முதல் டோசும், 3,87,618 பேருக்கு 2-வது டோசும் போடப்பட்டு உள்ளன.
புதுடெல்லி:

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் 2-வது அலையை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுடன், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயனாளர்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இவ்வாறு வேகமாக நடந்து வரும் பணிகள் காரணமாக இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை கடந்து விட்டது.

நேற்று காலை 7 மணி நிலவரப்படி மொத்தம் 11 கோடியே 11 லட்சத்து 79 ஆயிரத்து 578 டோஸ்கள் போடப்பட்டு இருந்தன. இதில் 60.16 சதவீத டோஸ்கள் வெறும் 8 மாநிலங்களிலேயே போடப்பட்டிருக்கிறது.

தடுப்பூசி திட்டத்தின் 88-வது நாளான நேற்று முன்தினம் மட்டுமே 26.46 லட்சம் டோஸ்கள் போடப்பட்டு இருந்தன. இதில் 22,58,910 பேருக்கு முதல் டோசும், 3,87,618 பேருக்கு 2-வது டோசும் போடப்பட்டு உள்ளன.

இந்தியாவில் பயனாளிகள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில் கடந்த 11-ந்தேதி முதல் நேற்று வரை தடுப்பூசி திருவிழா கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News