செய்திகள்
முதல் மந்திரி மம்தா பானர்ஜி

நாட்டில் தொழில்துறை வளர்ச்சி நின்றுவிட்டது - மம்தா பானர்ஜி தாக்கு

Published On 2021-03-26 17:39 GMT   |   Update On 2021-03-26 17:39 GMT
மேற்கு வங்காள சட்டசபைக்கு மார்ச் 27ல் தொடங்கி ஏப்ரல் 29 வரை என 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
கொல்கத்தா:

மொத்தம் 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் மத்திய அரசு மீதும் பிரதமர் மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டில் தொழில்துறை வளர்ச்சி நின்றுவிட்டது. அவரின் (பிரதமர் நரேந்திர மோடி) தாடி மட்டுமே வளர்கிறது. பிரதமர் மோடி தன்னை சில நேரங்களில் சுவாமி விவேகானந்தர் என கூறிக்கொள்கிறார் மற்றும் சில நேரங்களில் மைதானங்களுக்கு தனது பெயரை வைக்கிறார். அவரது (பிரதமர் மோடி) மூளையில் ஏதோ தவறு உள்ளது. அவரது திருகு (screw) தளர்ந்துவிட்டது போல தெரிகிறது என தெரிவித்தார். 
Tags:    

Similar News