செய்திகள்
கோப்புப்படம்

இலங்கையில் சீதை சிறை வைக்கப்பட்ட இடத்தில் இருந்து ராமர் கோவிலுக்கு ‘கல்’

Published On 2021-03-20 20:18 GMT   |   Update On 2021-03-20 20:18 GMT
அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜைகள் கடந்த ஆண்டு நடந்த நிலையில், அங்கு பிரமாண்ட கோவிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
அயோத்தி:

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜைகள் கடந்த ஆண்டு நடந்த நிலையில், அங்கு பிரமாண்ட கோவிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த கோவில் கட்டுமான பணிக்கு இலங்கையில் சீதையை சிறை வைத்திருந்த சீதா எலியா என்ற பகுதியில் இருந்து கல் எடுத்து வரப்படுகிறது. இந்த தகவலை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில், ‘ராமர் கோவிலுக்காக இலங்கையின் சீதா எலியாவில் இருந்து ஒரு கல் எடுத்து வரப்படும். இது இருநாட்டு உறவை வலுப்படுத்தும் தூணாகவும் விளங்கும். இந்த கல்லை மயூரபதி அம்மன் கோவிலில் வைத்து இலங்கைக்கான இந்திய தூதரின் முன்னிலையில், இந்தியாவுக்கான இலங்கை தூதராக நியமிக்கப்பட்டுள்ள மிலிண்டா மரகோடா பெற்றுக்கொண்டார்’ என்று கூறியுள்ளது.

இந்த கல்லை மிலிண்டா மரகோடாவே இந்தியாவுக்கு கொண்டு வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் சீதையை சிறைவைக்கப்பட்ட இடத்தில், அவருக்கு கோவில் ஒன்று அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News