செய்திகள்
ரிசர்வ் வங்கி கவர்னர்

கொரோனா மீண்டும் அதிகரிப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - ரிசர்வ் வங்கி கவர்னர்

Published On 2021-03-18 20:11 GMT   |   Update On 2021-03-18 20:11 GMT
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட சிக்கல்கள் முடிவுக்கு வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. அரசின் நடவடிக்கைகள் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீட்சி கண்டு வருகிறது. அரசின் தாராள மூலதன செலவுகள் காரணமாகவே கொரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரம் விடுபட முடிந்தது.

இந்நிலையில் மீண்டும் பாதிப்புகள் அதிகரிப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். தற்போதைய பாதிப்பு விரைவிலேயே கட்டுப்பட்டுத்தப்பட்டும் விடும் என ரிசர்வ் வங்கி கருதுகிறது. நாட்டின் சந்தையானது சீராக செயல்பட ரிசர்வ் வங்கி தொடர்ந்து உதவும்.
Tags:    

Similar News