செய்திகள்
காங்கிரஸ்

மேற்கு வங்காள தேர்தல் - 13 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

Published On 2021-03-06 17:50 GMT   |   Update On 2021-03-06 17:50 GMT
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணமுல், காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி, பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

291 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் முதல் மந்திரியுமான மம்தா பானா்ஜி நேற்று வெளியிட்டார்.

இதற்கிடையே, 57 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டது.
இதில் நந்திகிராம் தொகுதியில் முன்னாள் மந்திரியும், சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்தவருமான சுவேந்து அதிகாரி திரிணமுல் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள 13 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News