செய்திகள்
கோப்புப்படம்

ராஜஸ்தானில் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர் உயிரிழப்பு

Published On 2021-03-05 00:26 GMT   |   Update On 2021-03-05 00:26 GMT
நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு கடந்த 1-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கோட்டா:

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு கடந்த 1-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்தவகையில் ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்துக்கு உட்பட்ட கர்மோடி கிராமத்தை சேர்ந்த பகதூர்சிங் ராஜ்புத் (வயது 60) என்ற முதியவரும் நேற்று முன்தினம் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

நேற்று காலையில் அவருக்கு திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனால் சுருண்டு விழுந்த அவரை குடும்பத்தினர் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பகதூர்சிங் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். முதியவரின் இறப்புக்கான காரணம் குறித்து அறிவதற்காக அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கும் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர் உயிரிழந்த சம்பவம் கோட்டா மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News