செய்திகள்
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி

பெட்ரோல், டீசல் விலையேற்றம் : மத்திய அரசு மீது மாயாவதி தாக்கு

Published On 2021-02-24 00:52 GMT   |   Update On 2021-02-24 00:52 GMT
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது முற்றிலும் தவறானது, நியாயமற்றது என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
லக்னோ:

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று இந்தியில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘மக்கள் ஏற்கனவே கொரோனா, வேலையில்லாமை, பணவீக்கத்தால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையில், தொடர்ச்சியாக, தேவையில்லாமல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது முற்றிலும் தவறானது, நியாயமற்றது. பொதுநல பணிகளுக்கான நிதியை அதிகரிப்பதற்காகவே வரியைக் கூட்டுவதாக அரசு கூறும் காரணம் நியாயமில்லாதது’ என்று தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘பெட்ரோல், டீசல் மீதான வரியை தொடர்ந்தும், தன்னிச்சையாகவும் அதிகரிப்பதன் மூலம் பொதுமக்கள் மீது சுமையேற்றுவதை உடனடியாக நிறுத்துவது முக்கியம். அதுவே, கோடிக்கணக்கான ஏழைகள், உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அரசின் பெரிய நலப்பணியாகவும், நன்மையாகவும் இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News