செய்திகள்
ரேணுகாச்சார்யா

எனது சுயமரியாதைக்கு பங்கம் ஏற்பட்டால் சகித்துக்கொள்ள மாட்டேன்: ரேணுகாச்சார்யா

Published On 2021-01-30 01:48 GMT   |   Update On 2021-01-30 01:48 GMT
எனது சுயமரியாதைக்கு பங்கம் ஏற்பட்டால் சகித்துக்கொள்ள மாட்டேன் என்று பா.ஜனதாவை சேர்ந்த ரேணுகரச்சார்யா எம்.எல்.ஏ. கூறினார்.
பெங்ஙகளூரு :

மந்திரி பதவி கிடைக்காததால் பா.ஜனதாவை சேர்ந்த ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பா.ஜனாவில் என்னை போல் ஒரே கருத்து உடைய எம்.எல்.ஏ.க்கள் பலர் உள்ளனர். இந்த அரசு நிலையாக இருக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம். ஆனந்த்சிங் முதலில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவுக்கு வந்தார். நாங்கள் எடியூரப்பாவுக்கு எதிராகவோ அல்லது பா.ஜனதா அரசுக்கு எதிராகவோ நாங்கள் போராடவில்லை. சிலர் தங்களுக்கு குறிப்பிட்ட இலாகா தான் வேண்டும் என்று கேட்கிறார்கள்.

வியாபாரத்திற்காக மந்திரி பதவி தேவையா?. இதனால் முதல்-மந்திாி மற்றும் பா.ஜனதா அரசின் நற்பெயர் குறைந்துள்ளது. சிலர் தான் இந்த துறை விஷயத்தில் பிடிவாதமாக உள்ளனர். கட்சியை ஆட்சியில் அமர்த்த என்னை போன்றவர்கள் உழைத்தனர். ஆனால் அதன் பலனை இன்று வேறு சிலர் அனுபவிக்கிறார்கள். நான் மந்திரியாக வேண்டும் என்று எனது தொகுதி மக்கள் காத்திருக்கிறார்கள்.

கலால்துறை எனக்கு ஒதுக்கியபோது நான் சிறப்பான முறையில் பணியாற்றினேன். வேறு கட்சியில் இருந்து வந்தவர்களை மதிக்கிறார்கள். நாங்கள் கட்சியில் மூத்த நிர்வாகிகள் இல்லையா?. எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-மந்திரி மற்றும் மாநில தலைவரிடம் அனைத்து விஷயங்களையும் எடுத்துக் கூறுவேன். எனது சுயமரியாதைக்கு பங்கம் ஏற்பட்டால் சகித்துக்கொள்ள மாட்டேன். கட்சிக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்படக்கூடாது என்ற காரணத்தால் நான் பொறுமையாக இருக்கிறேன்.

இவ்வாறு ரேணுகாச்சார்யா கூறினார்.
Tags:    

Similar News