செய்திகள்
கோப்புப்படம்

இந்தியாவுக்கு அதிநவீன போர் விமானங்கள் விற்பனை - போயிங் நிறுவனம் அறிவிப்பு

Published On 2021-01-28 22:44 GMT   |   Update On 2021-01-28 22:44 GMT
இந்தியாவுக்கு அதிநவீன போர் விமானங்களை விற்பதற்கு போயிங் நிறுவனத்துக்கு அமெரிக்க அரசு உரிமம் அளித்துள்ளது.
புதுடெல்லி:

அமெரிக்காவை சேர்ந்த பிரபல போர் விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், எப்-15இஎக்ஸ் என்ற அதிநவீன போர் விமானங்களை தயாரித்துள்ளது. இந்த விமானம் பற்றிய தகவல்களை கேட்டு இந்திய விமானப்படை ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தது.

இந்தநிலையில், இந்த போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்பதற்கு போயிங் நிறுவனத்துக்கு அமெரிக்க அரசு உரிமம் அளித்துள்ளது. இதை இந்தியாவுக்கான போயிங் பிரிவு தலைவர் அங்குர் கனக்லேகர் தெரிவித்தார். அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:-

எப்-15இஎக்ஸ் போர் விமானங்கள், நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டவை. அனைத்து வானிலைகளிலும், இரவு, பகல் என எல்லா நேரத்திலும் சிறப்பாக செயல்படக்கூடியவை. இது, இந்திய விமானப்படைக்கு பெரிதும் உதவும்.

அடுத்த வாரம் பெங்களூருவில் தொடங்கும் ‘ஏரோ இந்தியா’ கண்காட்சியில் எப்-15இஎக்ஸ் விமானங்கள் காட்சிக்கு வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News