கேரளாவில் இன்று புதிதாக 6,036 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 5,173 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய கொரோனா அப்டேட்: கேரளா- 6,036, மகாராஷ்டிரா- 2,752
பதிவு: ஜனவரி 24, 2021 19:54
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
இந்தியாவிலேயே கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் 6,036 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5173 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 72,891 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 8,13,550 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 2,752 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,743 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் இதுவரை 20,09,106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,12,264 பேர் குணமடைந்துள்ளனர். 50,785 பேர் உயிரிழந்துள்ளனர். 44,831 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :