செய்திகள்
கைது

லஞ்ச வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது

Published On 2021-01-21 01:10 GMT   |   Update On 2021-01-21 01:10 GMT
நிறுவனத்திடம் லஞ்ச பெற்ற வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் அந்த சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 3 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
லக்னோ:

உத்தரபிரதேசத்தில் வங்கியில் ரூ.4,300 கோடி கடன் மோசடியில் ஈடுபட்டதாக சில நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து உள்ளது. இந்த வழக்கில் அந்த நிறுவனங்களுக்கு உதவுவதற்காக சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.கே.ரிஷி, இன்ஸ்பெக்டர் கபில் தன்காட் மற்றும் வக்கீல் ஒருவரும் லஞ்ச முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அந்த சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.கே.ரிஷியின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
Tags:    

Similar News