செய்திகள்
கோப்புப்படம்

சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்ட கேரள எம்.எல்.ஏ.க்கள் 4 பேருக்கு கொரோனா

Published On 2021-01-19 01:15 GMT   |   Update On 2021-01-19 01:15 GMT
சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்ட 4 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. அங்கு சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 4 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள், கே.அன்சாலன், கே.தாசன், முகேஷ் (மூவரும் மார்க்சிஸ்ட் கம்யூ.) மற்றும் இ.எஸ்.பிஜிமோல் (இந்திய கம்யூ.) ஆவார்கள்.

அன்சாலனும், தாசனும் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எஞ்சிய இரு எம்.எல்.ஏ.க்களும் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு கண்காணிப்பில் உள்ளனர்.

இது கேரள அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News