செய்திகள்
கோப்புப்படம்

கொச்சி - மங்களூரு இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Published On 2021-01-05 21:51 GMT   |   Update On 2021-01-05 21:51 GMT
கொச்சி- மங்களூரு இடையே ரூ.3 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் தொடங்கிவைத்தார்.
புதுடெல்லி:

கேரள மாநிலம் கொச்சி - கர்நாடக மாநிலம் மங்களூரு இடையே 450 கிலோ மீட்டர் நீளத்துக்கு கெயில் நிறுவனம் இயற்கை எரிவாயு குழாயை பதித்து உள்ளது. ரூ.3 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டப்பணி முடிக்கப்பட்டது. இதன் மூலம் கொச்சியில் இருந்து திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை தினமும் 1.2 கோடி மெட்ரிக் கனமீட்டர் அளவுக்கு மங்களூருவுக்கு அனுப்ப முடியும். ஒரே நாடு, ஒரே கியாஸ் வினியோக அமைப்பு நோக்கத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட இந்த திட்டத்தை நேற்று பிரதமர் மோடி காணொலி மூலம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தொடங்கி வைத்து நாட்டு க்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் கேரள, கர்நாடக கவர்னர்கள், அம்மாநிலங்களன் முதல்-மந்திரிகள் பினராயி விஜயன், எடியூரப்பா, மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோரும் காணொலி மூலம் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

மத்திய அரசு எரிசக்தி திட்டமிடலில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை கொண்டுள்ளது. சுத்தமான, மலிவான மற்றும் நிலையான எரிசக்தியை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்துக்கு மாற வரும் காலங்களல் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முதலீடு செய்யப்படும்.

இயற்கை எரிவாயு குழாய் திட்டங்கள் கடந்த 5 முதல் 6 ஆண்டுகளல் சுமார் 32 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளன. காற்று, சூரிய சக்தியை இணைக்கும் வகையில் உலகின் மிகப்பெரிய கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலை பணிகள் குஜராத்தில் தொடங்கப்பட்டு உள்ளன.

நாட்டின் எரிசக்தி தேவையில் 58 சதவீதம் நிலக்கரியில் இருந்து கிடைக்கிறது. பெட்ரோலியம் மற்றும் பிற திரவ எரிசக்தி 26 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இயற்கை எரிவாயுவின் பயன்பாடு 6 சதவீதம் தான். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

இயற்கை எரிவாயு தூய்மையானது மற்றும் குழாய் வழியாக கொண்டு செல்லக்கூடியது. இயற்கை எரிவாயு பயன்பாடு 2030-ம் ஆண்டுக்குள் 15 சதவீதமாக உயர்த்தப்படும்.

வளர்ச்சிக்கு முன்னுரிமை அளப்பதன் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் எந்த இலக்கும் கடினம் அல்ல என்பதற்கு கொச்சி-மங்களூரு இயற்கை எரிவாயு இணைப்பு திட்டம் சிறந்த எடுத்துக்காட்டு.

இந்த திட்டம் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களன் வளர்ச்சியை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். இருமாநில மக்களின் சிரமங்களை குறைத்து வாழ்க்கையை எளமையாக்கும். மேலும் இருமாநிலங்களல் மாசுபாட்டை குறைப்பதிலும் இந்த திட்டம் முக்கிய பங்களக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொச்சி-மங்களூரு இடையில் செயல்படுத்தப்பட்டு உள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டத்துக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜய் வரவேற்பு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் அவர் பேசியதாவது:-

அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகள், மலைகள் மற்றும் நீர்நிலைகள் வழியாக குழாய்கள் அமைப்பது என்பது கடினமான பணியாகும். கோர்ட்டு வழக்குகள் உள்பட பல்வேறு தடைகளை தாண்டி இந்த திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மொத்த தூரமான 450 கி.மீட்டரில் 414 கி.மீ. தூரத்திற்கு இயற்கை எரிவாயு குழாய் கேரளாவில் பதிக்கப்பட்டு உள்ளது.

பெரிய அளவிலான மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது இயற்கையாகவே மக்கள் அசவுரியங்களை எதிர்கொள்வார்கள். இத்தகைய க‌‌ஷ்டங்களை எதிர்கொண்ட போதும் கேரள மக்கள் இந்த திட்டத்துக்கும், அதை செயல்படுத்த அரசாங்கத்துக்கும் ஆதரவாக நின்றனர். இந்த திட்டம் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அவசியம் என்பதை அவர்கள் உணர்ந்ததால் தான் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டம் கேரள மக்களன் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News