பஞ்சாப் முதல் மந்திரியை கொல்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்த சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
முதல் மந்திரியை கொல்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு - பஞ்சாப்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
பதிவு: ஜனவரி 03, 2021 03:08
முதல் மந்திரி அமரீந்தர் சிங்
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் முதல் மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங்கைக் கொல்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று வழிகாட்டி வரைபடத்தில் அச்சிடப்பட்ட சுவரொட்டி வைக்கப்பட்டிருந்தது.
இதனால் பொதுமக்கள் உள்பட கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது மொகாலி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து மொகாலி நகர எஸ்.பி கூறுகையில், இந்த சுவரொட்டி டிசம்பர் 31 அன்று வைக்கப்பட்டது. இதன்பின்னர் ஐபிசியின் 504, 506 & 120 பி பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். போஸ்டரில் பஞ்சாப் முதல்-மந்திரி கொல்பவர்களுக்கு பரிசு என்ற வெகுமதியை அறிவிக்கும் மின்னஞ்சல் முகவரியும் கண்டுபிடித்ததாக ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. இந்த அச்சுறுத்தலுக்கு காரணமான நபர்களை கைது செய்ய போலீசார் அந்த பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி காட்சிகளை ஸ்கேன் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவித்தார்.
Related Tags :