search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமரீந்தர் சிங்"

    • நான் பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என்று பாஜகவில் சேர்ந்த ப்ரினீத் கவுர் தெரிவித்துள்ளார்.
    • கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எம்.பி ப்ரினீத் கவுர் காங்கிரஸ் கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டார்

    பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவி ப்ரினீத் கவுர் பாஜகவில் இணைந்துள்ளார்.

    பாட்டியாலா தொகுதி காங்கிரஸ் எம்.பியான ப்ரினீத் கவுர், மீண்டும் இதே தொகுதியில் பாஜக சார்பில் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

    பிரதமர் மோடி நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளார். நான் பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என்று பாஜகவில் சேர்ந்த ப்ரினீத் கவுர் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எம்.பி ப்ரினீத் கவுர் காங்கிரஸ் கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டார். கட்சி விரோத நடவடிக்கைகள் மற்றும் பாஜகவுக்கு உதவியதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில் அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

    அமரீந்தர் சிங் 2002 முதல் 2007 வரை பஞ்சாப் முதலமைச்சராக இருந்தவர். இவர் மீண்டும் 2-ம் முறையாக 2017 -ம் ஆண்டு மீண்டும் பஞ்சாப் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021-ல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அமரீந்தர் சிங் தனது முதலமைச்சர் ராஜினாமா செய்தார். பின்னர் அவர் காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் கட்சியை தொடங்கினார். அதன் பிறகு 2022 செப்டம்பரில் அவரது கட்சியை பாஜகவுடன் இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமரீந்தர் சிங் தனது சொந்த தொகுதியான பாட்டியாலாவில் தோல்வியடைந்தார்.
    • பாஜகவில் இணைந்த அவரை பாஜக தலைவர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் (வயது 80), உட்கட்சி மோதல் காரணமாக காங்கிரசில் இருந்து விலகினார். பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்று பெயரில் தனிக்கட்சி தொடங்கி அண்மையில் நடந்த பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் அவர் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ஆனால் அவரது கட்சி படுதோல்வியை சந்தித்தது. தனது சொந்த தொகுதியான பாட்டியாலாவில் அமரிந்தர் சிங் தோல்வியடைந்தார்.

    இந்த நிலையில் டெல்லியில் இன்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை அமரீந்தர் சிங் சந்தித்து பேசினார். அதன்பின்னர் அவர் முறைப்படி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அத்துடன் தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜகவுடன் இணைத்தார். அவரை பாஜக தலைவர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

    அமரீந்தர் சிங்குடன் அவரது ஆதரவாளர்களான முன்னாள் எம்எல்ஏக்கள் 7 பேர், முன்னாள் எம்.பி. ஒருவர் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர்.

    • முதுகுத்தண்டில் நேற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
    • அமரீந்தர சிங் நாளை வீடு திரும்பிவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பஞ்சாப் லோக் காங்கிரஸ் நிறுவனரும், மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங். இவர், கடந்த 2002 - 2007 மற்றும் பின்னர் 2017 - 2021 உட்பட ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாப் முதல்வராக பதவி வகித்துள்ளார்.

    இந்நிலையில், முதுகுத்தண்டில் நேற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமரீந்தர் சிங் நலமுடன் இருப்பதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் நாளை வீடு திரும்பிவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரதமர் நநேர்திர மோடி அமரீந்தர் சிங்கிற்கு தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு நலம் விசாரித்துள்ளார்.

    தனிக்கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார் அமரீந்தர் சிங்.
    பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் அமரீந்தர் சிங். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவருக்கும், அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவேன், ஆனால் பா.ஜனதாவில் இணையமாட்டேன் எனத் தெரிவித்திருந்தார். அதன்பின் புதிய கட்சி தொடங்குவேன். அதற்கான வேலைகளை தனது வழக்கறிஞர் செய்து வருகிறார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில், தான் தொடங்க இருக்கும் கட்சியின் பெயர் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். கட்சிப் பெயரை அறிவித்த அமரீந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார்.

    ×