என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
தேர்தல் கமிஷனில் புதிய கட்சி பெயரை பதிவு செய்ய அமரீந்தர் சிங் விண்ணப்பம்
Byமாலை மலர்16 Nov 2021 9:28 AM IST (Updated: 16 Nov 2021 9:28 AM IST)
பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் என்ற கட்சி பெயரை பதிவு செய்யுமாறு தலைமை தேர்தல் கமிஷனிடம் அமரீந்தர் சிங் விண்ணப்பித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதுடெல்லி:
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அமரீந்தர் சிங்.
இவருக்கும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவ் ஜோத்சிங் சித்துவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் அமரீந்தர் சிங் புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்தார்.
அவரது கட்சி பெயரை பதிவு செய்யுமாறு தலைமை தேர்தல் கமிஷனிடம் அமரீந்தர் சிங் விண்ணப்பித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து டெல்லி வட்டாரத்தில் விசாரித்த போது, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 29ஏ ஷரத்தின் படி பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்யுமாறு தேர்தல் கமிஷனருக்கு விண்ணப்பம் வந்துள்ளது’ என்ற தகவல் கிடைத்தது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அமரீந்தர் சிங்கிற்கு தற்போது 79 வயதாகிறது. பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியை இவர் தீவிரமாக வளர்த்தார்.
ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து முதல்-மந்திரி பதவி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
Next Story
×