search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவி பாஜகவில் இணைந்தார்
    X

    பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவி பாஜகவில் இணைந்தார்

    • நான் பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என்று பாஜகவில் சேர்ந்த ப்ரினீத் கவுர் தெரிவித்துள்ளார்.
    • கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எம்.பி ப்ரினீத் கவுர் காங்கிரஸ் கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டார்

    பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவி ப்ரினீத் கவுர் பாஜகவில் இணைந்துள்ளார்.

    பாட்டியாலா தொகுதி காங்கிரஸ் எம்.பியான ப்ரினீத் கவுர், மீண்டும் இதே தொகுதியில் பாஜக சார்பில் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

    பிரதமர் மோடி நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளார். நான் பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என்று பாஜகவில் சேர்ந்த ப்ரினீத் கவுர் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எம்.பி ப்ரினீத் கவுர் காங்கிரஸ் கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டார். கட்சி விரோத நடவடிக்கைகள் மற்றும் பாஜகவுக்கு உதவியதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில் அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

    அமரீந்தர் சிங் 2002 முதல் 2007 வரை பஞ்சாப் முதலமைச்சராக இருந்தவர். இவர் மீண்டும் 2-ம் முறையாக 2017 -ம் ஆண்டு மீண்டும் பஞ்சாப் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021-ல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அமரீந்தர் சிங் தனது முதலமைச்சர் ராஜினாமா செய்தார். பின்னர் அவர் காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் கட்சியை தொடங்கினார். அதன் பிறகு 2022 செப்டம்பரில் அவரது கட்சியை பாஜகவுடன் இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×