செய்திகள்
ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்கும் திட்டம்- ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்

Published On 2020-12-29 09:56 GMT   |   Update On 2020-12-29 09:56 GMT
ஆந்திரா மாநிலத்தில் வசதியற்ற ஏழைகளுக்கு அரசின் சார்பில் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, காளஹஸ்தி அருகில் ஊரத்தூரில் 6232 பேருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
திருப்பதி:

ஆந்திரா மாநிலத்தில் வசதியற்ற ஏழைகளுக்கு அரசின் சார்பில் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, காளஹஸ்தி அருகில் ஊரத்தூரில் 6232 பேருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

ஊரத்தூரில் 167 ஏக்கர் பரப்பளவில் ‘ஒய்.எஸ்.ஆர். ஜெகன் அண்ணா’ என்ற பெயரில் புதிய குடியிருப்புப் பகுதி அமைத்து, அங்கு குடிநீர் தொட்டி, கழிவுநீர் கால்வாய் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய 6,232 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 4,299 மனைகள் நகர மக்களுக்கும், 465 மனைகள் காளஹஸ்தியை அடுத்த கிராமப்புற மக்களுக்கும், 1.468 மனைகள் ஏர்பேடு கிராமப்பகுதிகளில் வாழும் வசதியற்றோருக்கும் பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்த மனைகளில் வீடுகட்டும் திட்டத்துக்கு நடைபெற்ற பூமிபூஜையிலும் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்றார். இந்த விழாவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த குடியிருப்பில் பசுமையான சூழலை ஏற்படுத்தி சுற்றுச்சூழலைப் பேணும் வகையில் 8,600 மரக்கன்றுகள் நடப்பட்டன.
Tags:    

Similar News