செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கு 1 லட்சம் இலவச தரிசன டிக்கெட்

Published On 2020-12-13 08:10 GMT   |   Update On 2020-12-13 08:10 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தரிசனத்திற்காக ஒரு நாளைக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் என மொத்தம் 10 நாட்களுக்கு 1 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 25-ந்தேதி முதல் ஜனவரி 3-ந்தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதற்காக ஆன்லைன் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கி தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஆன்லைனில் ரூ.300 கட்டணத்தில் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட் வீதம் மொத்தம் 2 லட்சம் பக்தர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வருகிற 24-ந்தேதி முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

அதன்படி ஒரு நாளைக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் என மொத்தம் 10 நாட்களுக்கு 1 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.
Tags:    

Similar News