செய்திகள்
திருப்பதி லட்டு

திருப்பதி லட்டு விநியோகம் செய்வதாக போலி இணையதளம்

Published On 2020-12-09 06:17 GMT   |   Update On 2020-12-09 06:17 GMT
திருப்பதி லட்டு பிரசாதத்தை அனைத்து நாடுகளிலும் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்வதாக போலி இணையதளம் குறித்த விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
திருப்பதி:

திருப்பதியில் கோவிலுக்குள் தயாரிக்கப்படும் ஏழுமலையான் லட்டு பிரசாத்துக்கு தனிச்சிறப்பு உள்ளது. தற்போது திருமலையில் லட்டுகளை பக்தர்கள் தேவையான எண்ணிக்கையில் வாங்கி கொள்ள தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில் லட்டு பிரசாதத்தை அனைத்து நாடுகளிலும் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்வதாக போலி இணையதளம் குறித்த விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இந்த இணையதளம் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி, தேவஸ்தானத்தின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

தேவஸ்தானத்தின் தொழில்நுட்பத்துறை மூலமாக இந்த இணையத்தளத்தை முடக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

பக்தர்கள் இதுபோன்ற போலி இணையதளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News