செய்திகள்
மெகபூபா முப்தி

ஸ்ரீநகரில் பொதுமக்களை வீடுகளில் இருந்து வெளியேற்றிய ராணுவம் - மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

Published On 2020-11-30 23:43 GMT   |   Update On 2020-11-30 23:43 GMT
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, நேற்று மத்திய அரசு மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை வெளியிட்டார்.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, நேற்று மத்திய அரசு மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி அதை இந்தியாவுடன் ஒருங்கிணைத்ததன் மத்திய அரசின் பார்வை இதுதானா? என்று கேள்வி எழுப்பினார்.

கடந்த வாரத்தில் 2 ராணுவ வீரர்கள், பயங்கரவாதி ஒருவரால் ஸ்ரீநகரின் அபன்ஷாவில் கொல்லப்பட்டதை அடுத்து, மக்கள் தினம்தோறும் ராணுவத்தினரால் சித்ரவதைக்கு உள்ளாகிறார்கள். “நள்ளிரவில் பொதுமக்களை வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றி தடியடி நடத்தியதுடன், அப்பாவி மக்களை ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பவும் வலியுறுத்தி உள்ளனர். இதுதான் இந்தியாவுடன் காஷ்மீரை ஒன்றிணைத்த மத்திய அரசின் பார்வையென்று இப்போது புரிகிறது” என்று மெகபூபா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுபற்றி வெளியான ஒரு கட்டுரை செய்தியையும் அவர் பகிர்ந்துள்ளார்.
Tags:    

Similar News