செய்திகள்
உலக சுகாதார அமைப்பு

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை - உத்தரபிரதேசத்துக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

Published On 2020-11-17 23:56 GMT   |   Update On 2020-11-17 23:56 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உத்தரபிரதேச அரசு சிறப்பாக செயல்படுத்தி இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதி ரோடரிகோ ஆப்ரின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
லக்னோ:

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உத்தரபிரதேச அரசு சிறப்பாக செயல்படுத்தி இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதி ரோடரிகோ ஆப்ரின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:-

கொரோனா பாதித்தவர்களின் தொடர்புகளை அடையாளம் காண்பதில் உத்தரபிரதேச அரசின் செயல்பாடு பாராட்டுக்கு உரியது. 70 ஆயிரம் முன்கள பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய செயல்பாடுகள், மற்ற மாநிலங்கள் பின்பற்றும் அளவுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News