செய்திகள்
பசவராஜ் பொம்மை

பாஜக எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் நடத்தவில்லை: போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை

Published On 2020-11-16 02:14 GMT   |   Update On 2020-11-16 02:14 GMT
மந்திரி பதவிக்காக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் யாரும் ரகசிய கூட்டம் நடத்தவில்லை என்று போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
தார்வார் :

கர்நாடக மந்திசபை விஸ்தரிப்பு விரைவில் நடைபெற உள்ளது. தற்போது மந்திரிசபையில் 7 காலியிடங்கள் உள்ளன. இது மட்டுமின்றி மந்திரிசபையில் இருந்து சிலரை நீக்கவும் எடியூரப்பாவும் திட்டமிட்டுள்ளார். அதனால் புதிதாக 10 பேருக்கு மந்திரி பதவி கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

மந்திரி பதவியை கைப்பற்ற பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இப்போதே ஆங்காங்கே ரகசியமாக கூடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். முதல்-மந்திரி எடியூரப்பாவை நேரில் சந்தித்து தங்களுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை தார்வாரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மந்திரி பதவியை பெறுவதற்காக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் யாரும் ரகசிய கூட்டத்தை நடத்தவில்லை. அனைத்து நடவடிக்கைகளும் பகிரங்கமாக, வெளிப்படையாக நடக்கிறது. மந்திரிசபை விரிவாக்கத்தின்போது அனைவருக்கும் இனிப்பான செய்தி கிடைக்கும். யாருக்கும் கசப்பான செய்தி கிடைக்காது. எம்.எல்.ஏ.க்கள் கூட்டங்கள் குறித்து முதல்-மந்திரிக்கு நன்றாகவே தெரியும். கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. எல்லாவற்றையும் எடியூரப்பாவே பார்த்துக் கொள்வார்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Tags:    

Similar News