செய்திகள்
அர்னாப் கோஸ்வாமி

அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

Published On 2020-11-11 11:34 GMT   |   Update On 2020-11-11 11:34 GMT
வடிவமைப்பாளர் தற்கொலை வழக்கில் ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிரா, ராய்காட் மாவட்டத்தின், அலிபாக் பகுதியை சேர்ந்த அன்வய் நாயக் என்பவர், 2018ல், தன் தாயுடன் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு துாண்டியதாக ஊடகவியலாளர்  அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூவரை, போலீசார், சமீபத்தில் கைது செய்தனர். 

இந்த வழக்கில், ஜாமின் கோரி, அர்னாப் உள்ளிட்ட மூவரும், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நேற்று முன்தினம் நிராகரிக்கப்பட்டது. 

இந்நிலையில், அலிபாக் செஷன்ஸ் நீதிமன்றத்தில், அர்னாப் உள்ளிட்ட மூவரும், ஜாமின் மனு தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்றத்திலும், அவர்கள் இடைக்கால ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று (நவ.,11) விசாரணைக்கு வந்தது. அவசர வழக்காக விசாரித்த நீதிபதி, மூவருக்கும் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும், ரூ.50 ஆயிரம் பிணைத்தொகை செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News