ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை, பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு
பதிவு: நவம்பர் 10, 2020 06:55
கோப்புப் படம்
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள கட்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இன்று காலை அப்பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் பயங்கர்வாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :