செய்திகள்
மந்திரி சுதாகர்

பசுக்களை கொல்வது இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிரானது: மந்திரி சுதாகர்

Published On 2020-11-09 01:37 GMT   |   Update On 2020-11-09 01:37 GMT
பசுக்களை நாம் குடும்ப உறுப்பினர்களை போல் பாவித்து செயல்படுகிறோம். பசுக்களை கொல்வது இந்துகளின் உணர்வுகளுக்கு எதிரானது என்று சுகாதாரத்துறை மந்திரி கூறியுள்ளார்.
பெங்களூரு :

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பசுக்களுடனான நமது தொடர்பு உணர்வுப்பூர்வமானது. பசுக்களை கொல்வதால் நமது உணர்வுகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் பசுவதை தடுப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டியது அவசியம். இதுகுறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. பசுக்களை நாம் குடும்ப உறுப்பினர்களை போல் பாவித்து செயல்படுகிறோம். பசுக்களை கொல்வது இந்துகளின் உணர்வுகளுக்கு எதிரானது.

பசுக்களின் பால் குடித்து நாம் வளர்கிறோம். பசுக்கள் நமது தாயுடன் ஒப்பிடுகிறோம். அதனால் தாய்க்கு கொடுக்கும் கவுரவத்தை நாம் பசுவுக்கும் கொடுக்கிறோம். ஆன்மிக உணர்வுகளுடன் யாரும் விளையாடக்கூடாது. கொரோனா தடுப்பு ஆலோசனை குழு பரிந்துரைப்படி பட்டாசு வெடிக்க முதல்-மந்திரி எடியூரப்பா தடை விதித்துள்ளார். பசுமை பட்டாசுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் தீபாவளியை எளிமையாக கொண்டாட வேண்டும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.
Tags:    

Similar News