ஜம்மு காஷ்மீரின் பாம்போர் மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
காஷ்மீர் என்கவுண்டர்- ஒரு பயங்கரவாதியை சுட்டுக் கொன்றது ராணுவம்
பதிவு: நவம்பர் 06, 2020 08:59
பாதுகாப்பு படையினர் (கோப்பு படம்)
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை ஒடுக்க ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
அவ்வகையில், பாம்போர் மாவட்டம் லால்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து நேற்று இரவு பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அடங்கிய கூட்டுப்படை அப்பகுதியை சுற்றி வளைத்தது. பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கியபோது, பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.
விடிய விடிய நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். தொடர்ந்து அங்கு துப்பாக்கி சண்டை நடைபெறுவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Related Tags :