செய்திகள்
பிரதமர் மோடி

காபுல் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது - பிரதமர் மோடி கண்டனம்

Published On 2020-11-02 18:04 GMT   |   Update On 2020-11-02 18:04 GMT
காபுல் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரில் உள்ள காபுல் பல்கலைக்கழகத்தில் இன்று புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியில் ஆப்கானிஸ்தானுக்கான ஈரான் தூதர் பங்கேற்பதாக இருந்தது. இதனால், நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்தனர். 

இன்று மாலை பல்கலைக்கழகத்திற்கு துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் வந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த மாணவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத மாணவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்டனர்.

பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் மாணவர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என ஆப்கான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், காபுல் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக பிரதமர்மோடி வெளியிட்டுள்ள செய்தியில், காபுல் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன். பயங்கரவாததை எதிர்த்து துணிவுடன் போராடும் ஆப்கானிஸ்தானுக்கு தேவையான ஒத்துழைப்பை அளிப்போம் என தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News